என்னுடைய நோக்கம் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான்!! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி பேட்டி!!

0
115
My aim is only to make the team win!! RCB Team Player Virat Kohli Interview!!
My aim is only to make the team win!! RCB Team Player Virat Kohli Interview!!
என்னுடைய நோக்கம் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான்!! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி பேட்டி!!
குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டியின் வெற்றிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் பேட்டியளித்தார். அப்பொழுது விராட் கோஹ்லி எப்பொழுதும் அதிரடியாக விளையாடுவதில்லை அது ஏன் என்று தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு போட்டி முடிந்து பின்னர் அளித்த பேட்டியில் விராட் கோஹ்லி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 16 ஓவர்களில் 206 ரன்களை எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் வில் ஜேக்ஸ் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 10 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் அடித்து 100 ரன்கள் சேர்த்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கியமான ஒன்று. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர். செய்தியாளர்களுக்கு விராட் கோஹ்லி அவர்கள் பேட்டியளித்தார்.
அப்பொழுது பேசிய விராட் கோஹ்லி அவர்கள் “வில் ஜேக்ஸ் அவர்கள் பேட்டிங் செய்ய வந்தபொழுது தொடக்கத்தில் அவரால் நினைத்தபடி பந்தை அடிக்க முடியவில்லை. இதனால் வில் ஜேக்ஸ் எரிச்சலடைந்தார். ஆனால் வில் ஜேக்ஸ் எப்படிப்பட்ட ஆட்டக்காரர் அவர் எவ்வளவு அதிரடியாக விளையாடுவார் என்பது எங்களுக்கு தெரியும்.
வில் ஜேக்ஸ் அவர்கள் மொஹித் சர்மா அவர்களின் ஓவர்களில் ஆடிய அதிரடியான ஆட்டம் என்னுடைய பங்கை முற்றிலுமாக மாற்றியது. வில் ஜேக்ஸ் ஆடிய அதிரடியான ஆட்டத்தை நான் மறு முனையில் நின்று ரசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த போட்டியை 19வது ஓவரில் வென்று விடுவோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் 16வது ஓவரின் முடிவில் வெற்றி பெற்றது மிகச்சிறந்த முயற்சிக்கான ஒரு சான்று ஆகும். வில் ஜேக்ஸ் அவர்கள் அடித்த இந்த சதம் டி20 போட்டிகளில் அடித்த சதங்களில் மிகச்சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் சேசிங் செய்யும் பொழுது ரன் ரேட்டை 10க்கு கீழ் செல்ல விடவே இல்லை. ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நபர்கள் அனைவரும் நான் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை என்று பேசுகிறார்கள்.
என்னுடைய நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது அணியை வெல்லச் செய்வது மட்டும் தான். அதை 15 வருடங்களாக செய்துள்ளேன். களத்தில் இல்லாமல் நீங்கள் கமெண்ட்ரியில் இருந்து விளையாட்டை பற்றி பேசுவது எந்த அளவுக்கு சரி என்று எனக்கு தெரியவில்லை.
யார் வேண்டுமானாலும் விளையாட்டை பற்றி பேசலாம். தினமும் உங்களுடைய அனுமானங்களை பேசலாம். ஆனால் களத்தில் நின்று விளையாடுபவர்களுக்கு மட்டும் தான் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று தெரியும். அது எனக்கு மஸ்கல் மெமரி போல இருக்கின்றது” என்று கூறினார்.