ஏமாற்றம் அடைந்த செரீனா வில்லியம்ஸ்

Photo of author

By Parthipan K

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத அஸ்ரென்காவுடம் மோதினார். முதல் செட்டை 6-1 என செரீனா வில்லியம்ஸ் எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்ரென்கா 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக 2-வது செட்டை 6-3 என அஸ்ரென்கா கைப்பற்றினார். 3-வது செட்டிலும் அஸ்ரென்கா கையே ஓங்கியது. இதனால் அந்த செட்டையும் 6-3 எனக் கைப்பற்றி 1-, 6-3, 6-3 என செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்