சூப்பர் ஸ்டாரின் சாகசங்கள் கண்களுக்கு விருந்து: மேன் வெர்சஸ் வைல்ட் குறித்து டிஸ்கவரி

0
69

பியர் கிரில்ஸ் மற்றும்‌ சூப்பர்ஸ்டார்‌ இணைந்து செய்யும்‌ சாகசங்கள்‌ கண்களுக்கு விருந்தாக அமையும்‌ என்று டிஸ்கவரி சேனல் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பியர் கேரில்ஸ் இயக்கத்தில் டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த நடிகர்களில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே நடிகர் என்ற புகழை ரஜினிகாந்த் பெற்றுள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்னர் யார் யார்? கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? என்பது குறித்து டிஸ்கவரி சேனல் நீண்ட விளக்கத்துடன் கூறிய அறிக்கை ஒன்றை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிட்டுள்ளது. அதன் தமிழ்ப்பதிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அகில உலக அளவில்‌ புகழ்‌ பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம்‌, சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில்‌ ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்கிற நிகழ்ச்சி மிகவும்‌ பிரபலமான ஒன்று. இதில்‌ பியர் கிரில்ஸ் என்னும்‌ சாகச வீரர்‌, மயிர்‌ கூச்செறியும்‌ அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும்‌, விலங்குகளுக்கு மத்தியிலும்‌ செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம்‌ பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடத்துவார்‌. இதுவரை இந்த நிகழ்ச்சியில்‌ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட்‌ நடிகைகள்‌ ஜூலியா ராபர்ட்ஸ்‌, கேட்‌ வின்ஸ்லெட்‌ ,டென்னிஸ்‌ வீரர்‌ ராஜர்‌ பெடரர்‌ , மற்றும்‌ சென்ற வருடம்‌ நமது பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி ஆகியோர்‌ பங்கேற்றுள்ளனர்‌ .

பிரதமர்‌ மோடியுடன்‌ நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில்‌ பெரும்‌ வரவேற்பை பெற்றது. உத்தரகாண்டில்‌ உள்ள ஜிம்‌ கார்பெட்‌ தேசிய சரணாலயத்தில்‌ இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம்‌ உலகெங்கிலும்‌ பேசப்பட்டது.

இப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில்‌ Into the Wild with Bear Grylls என்ற தலைப்பில்‌ சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ கர்நாடகாவில்‌ உள்ள பாந்திப்பூர்‌ காடுகளில்‌ படமாக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ பங்கு பெரும்‌ முதல்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்‌. அவரை திரையில்‌ அறிமுகப்படுத்திய இயக்குனர்‌ சிகரம்‌ கே பாலச்சந்தரின்‌ கவிதாலயா நிறுவனம்‌ சின்ன திரைக்கு அவரை முதன்‌ முதலாக டிஸ்கவரி தொலைக்காட்சி சார்பாக அழைத்து வருவதில்‌ பெருமை கொள்கிறது .

ஆபத்துகள்‌ நிறைந்த வனப்பகுதிகளில்‌ இயற்கையோடு ஒட்டி உயிர்‌ வாழும்‌ முறைகளை உணர்த்தும்‌ வகையில்‌ நம்‌ சூப்பர்ஸ்டார்‌ இந்த நிகழ்ச்சியில்‌ பங்கு பெற்றுள்ளார்‌ . நீர்‌ வளத்தின்‌ பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்‌. டிஸ்கவரி குழுமத்தின்‌ நிர்வாக இயக்குனர்‌ மேகா டாடா கூறுகையில்‌ பியர் கிரில்ஸ் மற்றும்‌ சூப்பர்ஸ்டார்‌ இணைந்து செய்யும்‌ சாகசங்கள்‌ கண்களுக்கு விருந்தாக அமையும்‌ என்று உறுதி கூறுகிறார்‌ .

Bear Grylls கூறுகையில்‌ “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன்‌ இந்திய துணைக்கண்டம்‌ அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன்‌. அவரை ஒரு உன்னத மனிதராகவும்‌ நான்‌ பார்க்கிறேன்‌’ இவ்வாறு டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது