ராணுவ தளபதிக்கு நேர்ந்த அவமரியாதை

Photo of author

By Parthipan K

பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா, அவருடன் வந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவரை சந்திக்க சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால், சவுதி நாட்டின் பாதுகாப்புத்துறை துணை மந்திரியான இளவரசர் காலித் பின் சல்மான் பின் அப்துல்லாஸை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்க சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் மறுத்துவிட்டதால் இம்ரான்கான் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. மேலும், சவுதி பட்டத்து இளவரசர் சல்மானின் இந்த முடிவு இந்தியாவுடனான சவுதி அரசின் நட்பை மேலும் அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.