துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

Photo of author

By Parthipan K

சிக்கிம் மாநிலத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலம் நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 10 நாட்டின் பிற பகுதிகளுடன் சிக்கிம் மாநிலத்தை இணைகிறது. அந்த மாநில எல்லையான ரங்கோ பூமியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்தமுறை பெய்த மழை காலங்களில் மட்டும் சுமார் நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 60 மீட்டர் நீளத்திற்கு மழை சாலை மற்றும் பாறைகள் சாலைகளின் நடுவே விழுந்து போக்குவரத்து உள்ளது.

இதனால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சிக்கிம் துண்டிக்கப்பட்டுள்ளது அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

மலைப்பிரதேசமான சிக்கிம் மாநிலம் இந்தியாவிலேயே குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட இயற்கை எழில்மிகு மாநிலம் என்பதால் அப்பகுதிக்கு மக்கள் ஆர்வமாக சுற்றுலா சென்றுவரும் நிலையில் இதுபோன்ற நிலச்சரிவுகள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது.