10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் வணிகவளாகங்களை மூடுங்கள் : மாவட்ட ஆட்சியர் அதிரடி!

0
110

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், பூங்கா, திரையரங்கம் உள்ளிட்ட இடங்களை மூட தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் பொருட்டு ஏற்கனவே மாவட்டத்தில் கல்விநிறுவனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மதுபானக் கூடங்கள் மற்றும் சுற்றுலா மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அத்தியாவசிய பொருட்களான உணவுபொருட்கள், பால், மருந்து போன்ற நிறுவனங்களைத் தவிர்த்து 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி புரியும் வணிக வளாகங்களை 31-ஆம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleகொரோனா பீதி கடலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை : அடுத்தடுத்து நடவடிக்கை!
Next articleமூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்கு சந்தை சரிவு