மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை!
புதுக்கோட்ட மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்த நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளுக்கு தொட்டியம் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து திரும்பிய மாணவிகள் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர் அப்போது ஆழம் தெரியாமல் நான்கு மாணவிகள் ஆற்றுக்குள் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும் நேற்று நள்ளிரவு கரூரில் இருந்து மாணவிகளின் உடல் கொண்டு வரப்பட்டது. அன்று இரவே மாணவிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து எஸ்.ரகுபதி. கரூர் எம்பி ஜோதிமணி, ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர் மாணவிகளில் பெற்றோருக்கு அறுதல் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அவர்கள் தமிழக அரசின் நிவாரண உதவியாக தலா 2 லட்சம் வழங்கினார்கள். அந்த மாணவிகளின் இறப்பு காரணமாக நேற்று பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மாணவிகளின் இறப்பை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.