மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

காதல் மனைவி இறந்து போனதால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகேயுள்ள நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜன். 26 வயதான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார். கடந்த 15 ஆம் தேதி பவித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இதனால் அவ்வப்போது சக கைதி மற்றும் சிறை பெண் காவலர்களிடம் நளினிக்கு சிறிய மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில் நேற்றிரவு துணியால் நளினி கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் கூறிய நளினியின் வழக்கறிஞர், நளினியின் … Read more

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 4,985 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.   குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் சென்னையை விட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் வந்தவாசி திமுக … Read more

தன்னுடைய மகன் சஞ்சய் வீடு திரும்பியதால் குஷியில் இருக்கும் இளையதளபதி விஜய்.!!

தன்னுடைய மகன் சஞ்சய் வீடு திரும்பியதால் குஷியில் இருக்கும் இளையதளபதி விஜய்.!!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க விமான சேவைகள், ரயில் சேவைகள், போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் பலர் வெளிநாட்டிலேயே தங்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் அந்தந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழு பாதுகாப்புடன் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சிறப்பு விமானத்தின் மேலும் அழைத்து வரப்பட்டனர்.   இந்நிலையில் பல மாதங்களாக தன்னுடைய மகன் சஞ்சையை காணாமல் இருந்த விஜய், தற்போது மகனை சந்தித்து குஷியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் படித்துவந்ச சஞ்சய் … Read more

விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை?

விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை?

கடலூர் மாவட்டம் கீழஅருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருபவர் நிலவழகன் என்னும் சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.இந்நிலையில் இவர் நேற்று ஒரு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லிக்குப்பம் காவல்துறையினர் இந்த கொலை குறித்து முன் பகையினால் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டாரா? என்னும் கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் … Read more

ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.!!

ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவிலும், கட்டுப்பாட்டிலும் இதுவரை 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் முடிவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது.   இப்பணியின் போது முதுமக்கள் தாழி, பானைகள், ஓடுகள், நாணயம், மணிகள், செங்கல், எலும்புக் கூடுகள் மற்றும் சுவர் போன்றவை அடையாளம் காணப்பட்டு ஆராய்ச்சியிட் மூலம் கண்டெடுத்துள்ளனர். தமிழரின் தொன்மையை உலகறிய அங்கு அருங்காட்சியகம் அமைக்குமாறு தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.   … Read more

கொரோனா பாதிப்பால் விருத்தாசலம் வட்டாட்சியர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பால் விருத்தாசலம் வட்டாட்சியர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியராக கவியரசு (45) பணிபுருந்து வந்தார். இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வட்டாட்சியர் கவியரசுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.   தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த கவியரசு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். களப்பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வரும் சூழலில் வட்டாட்சியர் ஒருவர் உயிரிழந்திருப்பது … Read more

வன்முறையில் ஈடுபடுபவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்யுங்கள்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

வன்முறையில் ஈடுபடுபவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்யுங்கள்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற ஒரு யுடியூப் சேனல் கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக பேசி தமிழகமே கொந்தளித்து இருகின்றன.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்,கண்டன முழக்கங்கள் என பிரச்சனைகள் ஒவ்ஒன்றாக வருகின்றன.இதற்கு தலைவராக இருந்த கறுப்பர் கூட்டம் நிர்வாகி சுரேந்திரன் புதுச்சேரி போலீசில் சரண் அடைந்தார். பின் அவரது கறுப்பர் கூட்டம் சேனல் அலுவலகம் சென்னையில் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில் கலவரங்கள் தூங்குபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் என மஜக பொதுச்செயலாளரும் ,நாகை … Read more

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? ஆளுங்கட்சியினரே அதிருப்தி!

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது, திமுகவின் வழக்கு காரணமாக வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தென்காசி,திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை முறையாக செய்யாமல் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மேலும் மூன்று மாத கால இடைவெளியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது, ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து அரசு நிர்வாகமும் முடங்கிப் போயுள்ளது,. இந்த சூழ்நிலையில் வார்டு வரையறையை ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளனர்,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது ஆனால், தற்பொழுது 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தலைமை மீதும் கட்சி மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர்,. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் இவர்கள் மட்டுமே பலனை பலனை அனுபவித்து வருவதால் தங்களுக்கு உரிய அங்கீகாரமும் தங்களுடைய வளர்ச்சிக்கு உள்ளாட்சி பதவிகளில் அமர்ந்தால் மட்டுமே கட்சியை பலமாக வைத்திருக்க முடியும் என்று புலம்பி வருகின்றனர்,

மேலும் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் மூலமாக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர், இதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக தயாராகி வருகிறது,

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்