நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சிறப்பு வந்தே பாரத் இரயில் நாளை இயக்கம்!!
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு நாளை(நவம்பர்9) சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் வரும் 12ம் தேதி தீபாவளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். வெளியூரில் வேலை செய்பவர்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் வேலையில் அவர்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது.
மேலும் இரயில்வே நிர்வாகம் பல சிறப்பு இரயில்களை அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தீபாவளிக்கு சிறப்பு வந்தே பாரத் இரயிலை அறிவித்துள்ளது. அதாவது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை முதல் நெல்லை வரை சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அதன்படி நாளை அதாவது நவம்பர் 9ம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்றும் பிறகு நெல்லையில் இருந்து சென்னைக்கு பிற்பகல் 3 மணிக்கும் சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த தீபாவளி சிறப்பு வந்தே பாரத் இரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.