ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன??
அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியானது மூன்றவாது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரப்பணியாற்றி வருகிறது. அதேப்போல் இவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது.
என்னதான் மோடி இரண்டு முறையும் பெருமளவில் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தாலும், இவர் தமிழகத்திற்கு சொல்லும்படி எதற்கும் வரவில்லை.
தற்போது இதை மாற்றுவதற்கான பணியில் பாஜக வேலை செய்து வருகிறது. எனவே, பிரதமர் மோடி ராமேஸ்வரம் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று தகவல் வெளியானது.
இந்த தகவலை உண்மையாக்குமாறு நாளை மறுநாள் நடைபெற இருக்கக்கூடிய அண்ணாமலையின் நடைப்பயணமானது முதலில் திருச்செந்தூரில் துவங்குவதாக இருந்த நிலை மாறி தற்போது ராமேஸ்வரத்தில் துவங்க இருக்கிறது.
இந்த ராமேஸ்வரத்தில் போட்டியிட அனைவரும் முந்தி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். காரணம், விவசாயம், தொழில் வளர்ச்சி என்பது கிடையாது. மீன்பிடி தொழில் அங்கு அதிகம் என்று அனைத்து விவரங்களையும் பாஜக முழுவதுமாக தெரிந்து கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதபுரத்தில் மீனவர்கள் பாதுகாப்பு மாநாடு நடக்க உள்ளது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.
எனவே, ராமேஸ்வரம் தொகுதிக்கு மோடியும் ஸ்டாலினும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.