திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

Photo of author

By Preethi

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

Preethi

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் இரண்டு மாவட்ட செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆக பணியாற்றி வந்த இளைய அருணா தற்போது மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் ராஜேந்திரன் மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது உடல் நலக்குறைவால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் இன்று முதல் கட்டமாக இரண்டு மாவட்ட செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.