சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி!
தமிழக மக்களிடையே பொதுவாக உள்ள கருத்தின் படி திமுக ஆட்சிக்கு வந்தால் ரெளடிசம், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவைகள் தானகவே வந்து விடும் என்பது பொதுமக்களின் கருத்தாகவே உள்ளது. அதன் படி சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆராயி, இவர் தனது மகள் மற்றும் தங்கையுடன் அங்குள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 20-வருடமாக குடியிருந்து வருகிறார்.
கடந்த இருபது வருடமாக ஒலை குடிசையில் குடியிருந்து வந்த அவர் அதனை அகற்றி விட்டு அட்டை வீடு அமைக்க அதற்கான பொருட்களை வாங்கி வீடு கட்டுவதற்கு தயாராக இருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த திமுக நகராட்சி நிர்வாகி உள்ளிட்ட மூன்று பேர் அங்கு வந்து நீங்கள் வீடு கட்ட எங்களுக்கு இரண்டு லட்சம் பணம் தர வேண்டும், அப்படி இல்லை என்றால் வீடு கட்ட விடமாட்டோம் என பகிரங்கமாக மிரட்டியதாக கூறி இந்த சம்பவம் குறித்து ஆராயி கடந்த 15-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் கேட்ட படி பணம் கொடுக்காததால் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் வந்த சங்ககிரி வருவாய் துறையினர், ஆராயின் கூறை வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ய முயன்றுள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
இந்த குறித்து அறிந்த சங்ககிரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட ஆராயி மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் சமாதானம் பேசினார். இதனை அடுத்து ஆராயி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆராயி கூறும்போது, நான் கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலத்தில் குடியிருந்து வருகிறேன். அதற்கு ரசீது உள்ளது. சில தினங்களுக்கு முன் 5 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியில் அட்டை வீடு கட்ட ஏற்பாடு செய்ய முயன்றபோது, திமுக பிரமுகர் ஒருவர் என்னிடம் வந்து இங்கு வீடு கட்ட வேண்டும் என்றால் 2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நான் பணம் தர மறுக்கவே, பணம் கொடுக்கவில்லை என்றால் உன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்த்துவிடுவேன் என மிரட்டி சென்றார். தற்போது, அவர் கூறியது போல் நேற்று அதிகாரிகள் உதவியுடன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் குழந்தை மற்றும் தங்கையுடன் வீடு இல்லாமல் தவிக்கிறேன். எனவே அரசு எனக்கு அதே இடத்தில் 2 செண்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மைதானம் செல்ல 2 இடங்களில் வழியுள்ள நிலையில் வேண்டும் என்றே எங்கள் நிலத்தை கேட்கின்றனர்.
திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில் அரசு அதிகாரிகள் இவ்வாறு ஏழை மக்களிடம் நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்? கடந்த இருபது வருடமாக கண்டு கொள்ளாத அதிகாரிகள், தற்போது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்? என்று அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர்.