மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!
திருப்பூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது திமுக கட்சி மதம் பிடித்த யானை போல பணவெறி பிடித்து சுற்றுகின்றது என்றும் திமுக கட்சிக்கு வாக்காளர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசினார்.
திருப்பூரில் செய்தியாளர்களை செந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் “வீட்டையே விட்டு வெளியே வராத முதல்வர் அவர்கள் துபாய், சிங்கப்பூர், ஸ்பெயின் என்று வெளிநாடுகளுக்கு மட்டும் பயணம் செய்கின்றார். ஆனால் வீட்டுக்கே செல்லாமல் நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களை சந்தித்து வருகின்றார்.
முதல்வர் அவர்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று இங்கு யாரும் கூறவில்லை. திமுக கட்சியினர் முதல்வரை திராவகம் அழைத்து வரலாமே. நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 24 மணி நேரமும் வீதிக்கு வந்து மக்களை சந்திக்கின்றார். ஓய்வின்றி கடுமையாக உழைக்கின்றார்.
ஆனால் இங்கு உழைக்கத் தெரியாத முதல்வர் அவர்கள் வரப் போகும் தோல்விக்காக இப்பொழுதே காரணம் தேடுகின்றார். தற்பொழுது பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் வீதிக்கு வந்து மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
மதம் பிடித்த யானை போல திமுக கட்சி தன்னிலை மறந்து பணவெறி பிடித்து சுற்றிக் கொண்டிருக்கின்றது. திமுக கட்சிக்கு வரப்போகும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
அமைச்சர் உதயநிதி அவர்கள் பேசியதற்கு ஐகோர்ட் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிச் செல்ல முடியாது. தவறு செய்தவர்கள் சட்டதின் கைகளில் அகப்படுவார்” என்று அண்ணாமலை அவர்கள் கூறினார்.