தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீட்டுக்காக? திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப் பயணம் செல்வது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகம் வெளிநாட்டு முதலீடுகளை கவர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி சுற்றுப் பயணம் செல்லும் முதல்வர், செப்டம்பர் 7 ஆம் தேதி சுற்றுபயனத்தை முடித்து கொண்டு தமிழகம் திரும்புகிறார். இந்த சுற்று பயணத்தின் போது வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளார். இந்த நிலையில் முதல்வரின் இந்த சுற்றுப் பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் நேற்று (ஆகஸ்ட் 23) நடந்த திருமண நிகழ்வில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் திமுக கடந்த 8 வருடங்களாகவே ஆட்சியில் இல்லை. அதிமுக தான் ஆட்சியில் இருந்து வருகிறது. அதிமுக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது இல்லையா என்பது வேறு விஷயம். அதிமுக ஆட்சி நடப்பதற்கு காரணமே திமுக தான். நாம் தாம் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் பேசி வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றக் கூடிய கட்சியாக திமுக உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த லட்சணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளிநாடு செல்கிறாராம். பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாக சென்று வந்து கொண்டிருக்கிறார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் தற்போது ஆரம்பித்துவிட்டார். வெளிநாடு செல்வதை நான் குறைசொல்லவில்லை. முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாடு செல்கிறாராம். முதலீடுகள் நாட்டுக்கா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.