குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா?

0
139

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா?

தற்போது தமிழக மக்களிடம் அதிக விவாத பொருளாக இருப்பது பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் பால் உயர்வு, பால் விலை உயர்வு நடைமுறைக்கு வந்து விட்டதால், தேனீர், ஐஸ்கிரீம் மற்றும் பால் சம்மந்தப்பட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர‌ அதிகம் வாய்ப்பு உள்ளது!

இந்நிலையில் இந்த பால் விலை உயர்வை கண்டித்து பெரும்பாலான தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர், அதிலும் முக்கியமாக திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் பால் விலை உயர்வை கண்டித்து டிவிட்டரில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்!

மேலும் அவருடைய தங்கையான தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழியும் இந்த பால் விலையேற்றத்தை கண்டித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தார், இதற்கு பதிலளித்த முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பால் விலை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் ஆனால் இதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தாமல் இருக்குமா என்று சட்டமன்றத்திலேயே அதுவும் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே கலாய்த்தார்.

இது அவை குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது! திமுகவின் நிலைப்பாடும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது தான் ஆனால் மு.க.ஸ்டாலின் கண்டித்து அறிக்கை விட்டது தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைத்து கொண்டு விட்டு அறிக்கை விட்டாரா என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்த வண்ணம் இருக்கின்றனர்! இது தான் முன்னோர்கள் சொன்ன பழமொழியான ” குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதா” என்பதற்கான அர்த்தமோ?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleதமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்
Next articleகிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங்