வன்னியர் வாக்குகள் போனால் என்ன? கொங்கு மண்டல வாக்குகளை அப்படியே அள்ள திட்டமிடும் திமுக! 

Photo of author

By Anand

வன்னியர் வாக்குகள் போனால் என்ன? கொங்கு மண்டல வாக்குகளை அப்படியே அள்ள திட்டமிடும் திமுக!

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி நேர்காணல் நடத்தி வருகிறது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. இவருடன் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

நேற்று 3 வது நாளாக தொடர்ந்த இந்த நேர்காணலில் சேலம் மற்றும் கொங்கு மண்டலத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.இந்த நேர்காணலின் போது விருப்பம் தெரிவித்தவர்களின் பொருளாதார பின்னணி,பொது மக்களிடம் இவர்களுக்கு உள்ள செல்வாக்கு மற்றும் சமீக காலங்களில் நடந்த இயற்கை பேரிடர்களின் போது திமுக சார்பாக இவர்கள் மேற்கொண்ட பணிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் சூழலில் அச்சமுதாய வாக்குகளை திமுக பக்கம் அப்படியே திருப்பி விட என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர்களிடம் கேள்விகள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.திமுகவின் பலமான வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகள் இட ஒதுக்கீடு காரணமாக குறையும் நேரத்தில் கொங்கு மண்டல வாக்குகளை வைத்து சரி செய்ய திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.