திருச்சி மாநாடு: இந்து மத வழக்கப்படி குத்துவிளக்கு ஏற்றி திமுகவின் மாநாடு தொடக்கம்..!!
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை பாராட்டும் விதமாக திமுகவின் சார்பில் இன்று பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்று வருகின்றது. ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு திருச்சியை கலக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் புதிய முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களின் நேரடி பார்வையில் மாநாட்டிற்கான பணிகளை மிக சிறப்பான முறையில் செய்து வைத்திருந்தார். விழாவில் திமுக கட்சியின் தூண்களான பெரியார், அண்ணா, கலைஞர் படங்கள் பெரிய பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தது. மாநாட்டின் தொடக்கமாக இந்துமத வழக்கப்படி குத்துவிளக்கேற்றி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எப்போதும் திமுகவின் பாடல் ஒளிக்க கட்சியை கொடியை ஏற்றவது வழக்கம். இந்த முறை குத்துவிளக்கு முதல்முறையாக ஏற்றியது புதிய மாற்றமாக உள்ளது.
மாநாட்டில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். சிலருக்கு மட்டுமே மாநாட்டில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது, பேசியவர்கள் அனைவரும் குறைந்த நேரமே எடுத்துக் கொண்டனர். கவுன்சிலர்கள், தலைவர்கள் மற்றும் முக்கிய பதவியில் உள்ளவர்களுக்கு தனித்தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து திமுகவின் உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.