திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

Photo of author

By Parthipan K

வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கடந்த சில நாட்களாக இருமல் இருந்து வந்தது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இவர் தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனா தொற்றிற்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.