ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்!

0
68

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்!

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னும் பகுதியை சேர்ந்த தலித் இனமான மனிஷா வால்மீகி என்னும் 20 வயது இளம்பெண்ணை,ஜாதி வெறி பிடித்த மிருகங்களால்,நாக்கு வெட்டப்பட்டு,முதுகெலும்பு உடைக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர்.
உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனிஷா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

தலித் இனத்தைச் சேர்ந்த ஒரே காரணத்திற்காக,அந்தப் பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட தராமல் காவலர்களே தகனம் செய்த கொடூரம் அரங்கேறியது.
இதுமட்டுமின்றி அந்தப் பெண் தனது மரணம் வாக்குமூலத்தில் 4 பேரால் கற்பழிக்கப்பட்டதாக கூறியும் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை மருத்துவமனையும்,காவல் துறை சார்பிலும் தற்போது வரை ஏற்க மறுக்கின்றது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் ரகசியம் காத்து வருகின்றனர் மேலும் அந்தப் பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி அசம்பாவிதங்களை தடுப்பதற்காக அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அங்கு,அரசியல் பிரமுகர்களையும் எந்தவிதமான பத்திரிகையாளர்களையும் அந்த கிராமத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில்,நேற்று சில தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர்களுக்கு மட்டும் கிராமத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் மகளின் உடலை கடைசியாக ஒரே ஒருமுறை பார்க்க வேண்டுமென காவல்துறையினரிடம் கதறியும் அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து அவசர அவசரமாக அவளது சடலத்தை தகனம் செய்து விட்டனர்.இதுமட்டுமின்றி தற்போது வரை தங்களது மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை எங்களிடம் காட்டாமல் மறைத்து வைத்திருக்கின்றனர்.
இதுமட்டுமின்றி எங்கள் வீட்டில் எந்நேரமும் போலீசார் இருக்கின்றனர்.எங்களை வெளியே செல்வதற்கும் மற்றவர்களிடம் பேசுவதற்கும் அனுமதி மறுக்கின்றனர்.மேலும் இந்த வழக்கை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கிராம நிர்வாகமும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றது. எங்கள் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் செய்தியாளர்களிடம் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.

author avatar
Pavithra