மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!!

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!!

சென்னை அடையறை சேர்ந்த ரம்யா என்பவர், கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கணவரை பற்றி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது :
என்னுடைய கணவர் சாரதிகுமார் வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபடுவதாகவும், கேள்விகேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார்.

ரம்யாவின் கணவர் சாரதிகுமார் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கும் சாரதி குமாருக்கும் கடந்த 2016 ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சாரதிகுமார் திருமணம் செய்வதற்கு முன்பே கல்லூரியில் பணியாற்றியதாகவும், அங்கே இவரைவிட 15 வயது அதிகமான பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளுக்குநாள் அதிகமாகி இருவரும் தவறான உறவை வைத்திருந்தனர்.

ரம்யா குழந்தை பிறந்தவுடன் தாய்வீட்டிற்கு சென்றபோது, சத்ய பிரியாவை தனது வீட்டிற்கே அழைத்து வந்து தவறாக இருந்ததாக ரம்யா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து திமுக கட்சி முக்கிய தலையிடம் தெரிவித்தபோது, தன்னையும் தனது குடும்பத்தையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுகிறார். என்னுடைய நகைகளையும் அவரது ரகசிய உறவு பெண்ணிடம் கொடுத்துவிட்டார்.

மேலும், சாரதி குமாருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். உயிர் பாதுகாப்பிற்காக தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக கூறியவர், தனது கழுத்தில் கத்தியை வைத்து தாலியை கழட்டி கொடுக்குமாறும் பயமுறுத்தியதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த புகாரின் அடிப்படையில் சாரதி குமாரிடம் கேட்டபோது, தனக்கும் ரம்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரியுள்ளோம், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அவ்வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் விரைவில் முடியும் என்றும், பணத்திற்காகவே இதுபோன்று குற்றச்சாட்டை கூறி வருவதாகவும் கூறினார்.

Leave a Comment