அடக்கமில்லா அடைக்கலமணி.! மது போதையில் பெண் காவலரை திட்டியதால் திமுக உடன்பிறப்பு மீது வழக்குப்பதிவு!

Photo of author

By Jayachandiran

அடக்கமில்லா அடைக்கலமணி.! மது போதையில் பெண் காவலரை திட்டியதால் திமுக உடன்பிறப்பு மீது வழக்குப்பதிவு!

Jayachandiran

குடிபோதையில் பெண் போலீசை விமர்சித்த பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் அடைக்கலமணி. இவர் நேற்று இரவு மது போதையில் தனது காரில் வந்துள்ளார். அப்போது வளையப்பட்டி ஐந்தாம் நம்பர் சாலையில் போலீசார் வாகன சோதனையின் போது அடைக்கலமணியின் வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் காவலர் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையில் பேசிய தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சட்டத்தை மதிக்காமல் மதுபோதையில் கார் ஓட்டியது, காவல் பணியாளரை வேலை செய்யவிடாமல் தடுத்தது மற்றும் குடிபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்டது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவரது மனைவி சுதா பொன்னமராவதி ஒன்றிய சேர்மேனாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அரசியல் கட்சியில் இருந்துகொண்டு காவல்துறையிடமே சட்டத்தை மீறி நடந்த சம்பவம் அரசியல்வாதிகள் மீதான மதிப்பை குறைக்கவே செய்கிறது.