திமுகவின் புதிய பொதுச் செயலாளர் யார்..? முக்கிய பதவியை துரைமுருகன் கைப்பற்ற அதிக வாய்ப்பு! ஆனால் ஸ்டாலின்?
சமீபத்தில் கட்சியின் இரண்டு எம்எல்ஏ மற்றும் மூத்த அரசியல்வாதியான அன்பழகன் இறப்பிற்கு பிறகு அந்த பதவிக்கு யார் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. முதல்வருக்கு அடுத்த பதவி என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.
திமுக கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் போனதால் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் எம்.ஜி.ஆர் தனது கட்சியை சரியாக வழிநடத்தியதுபோல் அவருக்கு பிறகு ஜெயலலிதா நிரந்தர கழக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து முக்கிய முடிவுகளை எடுத்து கட்சியை திறம்பட வழிநடத்தி வந்தார். இந்நிலையில் திமுகவின் பொருளாளராக இருக்கும் துரைமுருகனுக்கு கழக பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படுமா அல்லது திமுக தலைவர் ஸ்டாலினே அப்பதவியை கைக்கொள்வாரா என்பது குறித்த சூடான விவாதம் அரசியல் கட்சியினரிடையே பேசப்பட்டு வருகிறது.
திமுகவின் குடும்பத்தில் இருந்து ஸ்டாலினோ அல்லது கனிமொழியோ பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. திமுகவின் துணை பொதுச்செயலாளர் பெரியசாமி அல்லது திமுக வின் பொருளாளர் துரைமுருகன் ஆகியோரில் ஒருவர் நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டால், பொருளாளர் பதவிக்கு
எ.வ.வேலு, டி.ஆர்.பாலு மற்றும் முதன்மை செயலாளராக உள்ள கே.என்.நேரு உள்ளிட்ட மூன்றுபேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.