தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் முதலமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்?

0
263
DMK The announcement made by the head club! Is the Chief Minister filing nomination again?
DMK The announcement made by the head club! Is the Chief Minister filing nomination again?

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் முதலமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்?

திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. அதில்  மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளா், பொருளாளா் , தி.மு.க. தலைவா் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா். இந்த பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.இன்று காலை பத்து  மணி முதல் ஐந்து  மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமைஅறிவித்துள்ளது.

Previous articleஅடுக்குமாடி குடியிருப்பில்  வசிப்பவர்களின் கவனத்திற்கு! மின் வாரியம் அனுப்பியுள்ள தகவல்!
Next articleஓபிஎஸ் அதிரடியால் அதிர்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here