அடுக்குமாடி குடியிருப்பில்  வசிப்பவர்களின் கவனத்திற்கு! மின் வாரியம் அனுப்பியுள்ள தகவல்!

0
171
Attention apartment dwellers! The information sent by the electricity board!
Attention apartment dwellers! The information sent by the electricity board!

அடுக்குமாடி குடியிருப்பில்  வசிப்பவர்களின் கவனத்திற்கு! மின் வாரியம் அனுப்பியுள்ள தகவல்!

தமிழகம் முழுவதும் மின்கட்டணம் உயர்த்த மின்சார வாரியத்தின் பரிந்துரைகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.அந்த ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி மின் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.இதனையடுத்து கட்டண விகித முறையில் பல்வேறு சீரமைப்புகளை மின்சார வாரியம் செய்துள்ளது.நுகர்வோர் ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்துள்ள மின் இணைப்பின் வகை பிரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு புதிய விகதப்படி கட்டணத்தை நிர்ணயம் செய்யப்படும்.அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் நீர் உள்ளிட்ட தேவைகளுக்கு மோட்டார்களை பயன்படுத்துகின்றனர்.இவை பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.கட்டண உயர்வுக்கு முன்பாக இந்த மின் இணைப்பானது வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பை விட பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பு கட்டணம் 1டி ஓரளவு அதிகம் என கூறப்படுகிறது.வெவ்வேறு வகையான மின் இணைப்புக்கு வேறுவேறு பிரிவு எண் கொடுக்கப்பட்டுள்ளது.1ஏ என்பது வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பு  .1சி என்பது மொத்த அளவிலான மின் விநியோக எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.1டி என்பது பொதுப் பயன்பாடு மின் இணைப்பு,2 ஏ என்பது பொது குடிநீர் விநியோகம் தெரு விளக்கு,2 பி என்பது அரசு மற்றும் அரசு சார்பு கல்வி நிறுவனங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

2பி (2) என்பது தனியார் கல்வி நிறுவனங்கள் ,2சி வழிபாட்டுத் தலங்கள் ,3ஏ (1)பருத்தி சிறு தொழில் நிறுவனங்கள் ,3ஏ(2) விசைத்தறி 5 என்பது வேளாண்மை என பிரிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் இணைப்பு எந்தப் பிரிவில் இருந்து எந்த பிரிவுக்கு மாற்றப்படுகிறது என்பது குறித்த குறுந்தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அந்ததந்த பிரிவுக்கு நிர்ணயம் செய்த கட்டணத்தின் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.

author avatar
Parthipan K