ஒரு வாரம் செய்யுங்கள் கால்வலி கால் மரத்துப்போதல் நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

Photo of author

By Kowsalya

ஒரு வாரம் செய்யுங்கள் கால்வலி,கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா.

வாருங்கள் இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சுடு தண்ணீர்

2. ஆப்பிள் சீடர் வினிகர்

3. உப்பு.

பயன்படுத்தும் முறை:

1.ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவிற்கு சுடுதண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். சூடாக இருக்க வேண்டும்.

2.பின் அதில் நான்கு ஸ்பூன் அளவிற்கு ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றவும்.

பின்னர் அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

நன்கு கலந்து விட்டு கல் உப்பு கரையும் வரை இருங்கள்.கல்லுப்பு கரைந்த பின் உங்கள் கால்களை வைத்து முன்னும் பின்னும் விரல்களை அசைத்து வாருங்கள். பிறகு சிறிது நேரம் வைத்து வைத்து எடுங்கள்.

பின் பாதங்களையும் நன்கு முன்னும் பின்னுமாக சுழற்றுங்கள்.

தண்ணீரின் சூடு ஆறும் வரை கால்களை வைத்திருங்கள்.

மேலும் நரம்பு சுருட்டல் உள்ளவர்கள் சுக்கு, ஓமம், மஞ்சள்அதிகம் சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள்.

தொடர்ந்து ஒருவாரம் இதனைப் பயன்படுத்தி பாருங்கள்! கண்டிப்பாக பயன்படுத்தி வந்தால் நற்பலன் கிடைக்கும்.