உங்கள் வீட்டில் பல்லி தொல்லையா? விரட்டுவதற்கு இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

0
88

வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. பல்லிகளைப் பார்த்து பயப்படுபவர்கள் இன்றும் பலர் உள்ளனர். இந்தப் பல்லி தொந்தரவுகளிலிருந்து விடுபட சில எளிய வழிகள். இதில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள பல்லியை எளிதில் விரட்டலாம்.

பூண்டு: பூண்டு பற்களை அரைத்து அதன் நீரை பல்லி அதிகம் வரும் இடங்களில் தெளித்தால் அந்த இடத்தில் மீண்டும் பல்லி வராது.

முட்டை ஓடு: பல்லி வரும் இடங்களில் உடைத்த முட்டை ஓட்டை வைத்தால் பல்லி வரவே வராது.

நாப்தாலீன் பந்துகள்: பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும் இந்த பந்துகள் பல்லி தொந்தரவை போக்க உதவும்.

மிளகு: மிளகை தண்ணீரில் ஊற வைத்து பின் மைய அரைத்து, நீரை மட்டும் வடிகட்டி அதை வீட்டுச் சுவர்களில் ஸ்பிரே செய்தால் பல்லி வரவே வராது.

வெங்காயம்: பல்லி அதிகமாக வரும் இடங்களில் வெங்காயத்தை வெட்டி வைக்கலாம் அல்லது அரைத்து அதன் சாறை தெளித்தாலும் அதன் நெடி தாங்க முடியாமல் பல்லி வராது.

author avatar
Parthipan K