வீட்டில் தங்கம் சுலபமாக சேர “மஞ்சள் பரிகாரம்” செய்யுங்கள்..!!
நம் அனைவருக்கும் தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பணக் கஷ்டத்தால் அவற்றை சேமித்து வைக்க முடியாமல் பலரும் திணறி வருகிறோம். சிலரது நகை அடகு கடைக்கு சென்று விடுகிறது. இப்படி நம் வீட்டில் தங்கம் தங்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கிறது. இதற்கு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். அதன்படி தங்கம் வீட்டில் சேர மஞ்சள் பரிகாரம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.
வீட்டில் தங்கம் சேர மஞ்சள் பரிகாரம் செய்வது எப்படி..?
இந்த மஞ்சள் பரிகாரத்தை வியாழன் அன்று மாலை 5- 6 மணிக்குள் செய்ய வேண்டும். ஒருவேளை வியாழன் அன்று செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை செய்யலாம் அல்லது ஞாயிற்றுக் கிழமையில் அன்று செய்யலாம்.
முதலில் நம் வீட்டில் குண்டுமணி அளவு தங்கமாவது இருக்க வேண்டும். அந்த தங்கத்தை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து மஞ்சளில் விநாயகர் பிடித்து அதனுள் அந்த தங்கத்தை வைத்துவிடவும். இதை பூஜை அறையில் தான் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பின்னர் உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்து வீட்டில் குறையாத தங்கம் சேர வேண்டுமென்று நினைத்து வேண்டிக் கொள்ளவும்.
அடுத்து பிடித்து வைத்துள்ள மஞ்சளுக்கு முன் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அதற்காக ஒரு பவுலில் கோதுமை நிரப்பி அதில் ஒரு காப்பர் விளக்கை வைத்து ஆரஞ்சு நிற திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவும். இவ்வாறு செய்வதால் தங்கம் வாங்கும் யோகம் விரைவில் உண்டாகும்.