மாதவிடாய் காலத்தில் பெண்கள் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க!!!

0
104
#image_title

மாதவிடாய் காலத்தில் பெண்கள் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க!!!

மாதவிடாய் உள்ள பெண்கள் அந்த சமயத்தில் மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள் பற்றி இந்த பதிவின்.மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் எனப்படுவது பெண்களுக்கு கருத்தரிகாத நேரங்களில் இம்மடிப்புகளில் இருக்கும் தேவையற்ற இழையங்கள் மற்றும் அவற்றுடன்.சேர்ந்து மடிப்புகளில் இருக்கும் நுண்ணிய இரத்தக் குழாய்களில் இருந்து இரத்தமும் கழிவாக வெளியேறும். மாதவிடாய் பெண்களுக்கு மாதந்தோறும் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நடக்கும்.

இந்த மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிறு வலி ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும். மேலும் பலவித உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க நன்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

இந்த பதிவில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள்…

* பெண்களுக்கு மாதவிடாய் இருக்கும் பொழுது உப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

* ஒரே நாப்கினை நாள் முழுவதும் அணிந்திருக்கக் கூடாது.

* மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதில் பயம் கொள்ள வேண்டாம். ஆனால் மாதவிடாய் காலங்களில் ஈடுபடும் பொழுது பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பு இல்லாமல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுறவு கொள்வது மோசமான செயல் ஆகும்.

* புகைப்பிடிக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* மாதவிடாய் காலத்தில் பெண்கள் துரித உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிகம் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யக்கூடாததை பார்த்தோம். தற்பொழுது மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

* மாதவிடாய் இருக்கும் காலத்தில் பெண்கள் முடிந்த அளவு சரியான நேரத்திற்கு உணவுகளை சாப்பிட வேண்டும்.

* மாதவிடாய் இருக்கும் காலத்தில் பெண்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சுலபமான உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும்.

 

Previous articleமாநகராட்சியின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Next articleவாழை இலையில் தினமும் உணவு உண்ணும் பொழுது இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!!?