தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

Photo of author

By Parthipan K

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இப்போதைக்கு தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று டிரம்ப் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால் மோசமான தேர்தலாக அமைய வாய்ப்பு இருக்கிறது. ஏனேனில் முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரலாம் என கூறினார். கடினமான தேர்தல் முறைகளில் தபால் ஒட்டுமுறை இந்த முறை பயன்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் கடினமான சுழலே அமைந்துள்ளது.
இங்கும் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டால் அவமானமாக அமைந்துவிடும் மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தால் மட்டுமே நடத்தலாம் இல்லை என்றால் தள்ளி வைக்கலாமே என்று அவர் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் உடனே தன் கருத்தை பின்வாங்கினார்.  பத்திரிகையாளர்கள் முன் பேசிய அவர் தேர்தலை நான் ஒத்திவைக்கலாம் என்று கூறவில்லை மின்னஞ்சல்  வாக்குகளை எண்ண நீண்ட நாட்கள் தேவைப்படும் என்பதால் அதுவரை  என்னால் காத்திருக்க விரும்பவில்லை என்று கூறினார்.