ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை!
ரயில்வேகான நாடாளுமன்ற நிலுவை குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் அந்த குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலுக்கு பிறகு ரயில் பயணங்களில் பயணங்களுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
மேலும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகையை அடைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சலுகையும் ரத்து செய்யப்பட்டது. மேலும் தற்போது ரயில்வே இயல்பு நிலைக்கு திரும்பி வருகிற நிலையில் வெவ்வேறு வகை ரயில் பயணிகளுக்கு நியமன முறையில் மீண்டும் கடந்தசலுகையை அளிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுகைகளுடன் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணங்களுக்காவது உடனடியாக கட்டண சலுகை அடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே ஆண்டுதோறும் சுமார் 2000 கோடி செலவழித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரயில் பயணங்களுக்கான கட்டண சலுகை 4 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் 11 வகையான நோயாளிகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கான சலுகை தவிர வேறு சலுகைகள் அனைத்தும் ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.