தேனி குளவி கடித்தால் உடனே இதை செய்யுங்கள்!!! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!
நமது வீடுகளில் நமக்கே தெரியாமல் ஆங்காங்கே தேனி அல்லது குளவி கூடு கட்டி இருக்கும். குறிப்பாக நம் வீட்டின் பின்புறத்தில் செடி கொடிகள் வளர்த்தால் அதற்கு இடையே கூட அது கூடு கட்டி இருக்கும். அது தெரியாமல் நாம் கை வைத்து விட்டோம் என்றால் அந்த தேனீ அல்லது குளவி நம்மை கடித்து விடும். உயிர் போகும் விஷம் அதில் இல்லை என்றாலும் அதன் வலியை தாங்கிக் கொள்ளவே முடியாது. தேனி அல்லது குளவி கடித்தால் அதனின் கொடுக்கை முதலில் நீக்க வேண்டும்.
பிறகு வீட்டில் இருக்கும் வெங்காயத்தை எடுத்து அதனை இரண்டாக வெட்டி தேனி அல்லது குளவி கடித்த இடத்தில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். அதேபோல வீட்டில் மண்ணெண்ணெய் இருந்தாலும் வைக்கலாம்.
அதுமட்டுமின்றி வீட்டில் சுண்ணாம்பு இருந்தால் அதனை குழைத்தும் கடித்த இடத்தில் பற்று போடலாம். அவ்வாறு போடுவதால் அதன் விஷம் இறங்கி விடும். வலியும் மெது மெதுவாக குறைய ஆரம்பிக்கும். மாங்காய் காம்பில் இருக்கும் பாலையும் தடவினால் தேனி மற்றும் குளவியின் விஷம் இறங்கி விடும்.