உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!!

இன்று பலர் பணப் பிரச்சனையால் வாழ்வை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.சிலருக்கு வேலை இல்லாமல் போதல்,சிலருக்கு குறைவான சம்பளம் என்று இருப்பதால் அவர்களை பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறது.

இந்த பணப் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்க கீழே சொல்லப்பட்டுள்ள படி தொடர்ந்து செய்து வாருங்கள்.

1)அகல் விளக்கு
2)நெய்
3)தாமரை தண்டு திரி
4)மஞ்சள்
5)குங்குமம்

உடையாத,விரிசல் இல்லாத மண் அகல் விளக்கு ஒன்றை வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் பன்னீர் ஊற்றி மண் அகலை 10 நிமிடங்கள் ஊற விடவும்.

அதன் பின்னர் அகல் விளக்கை ஒரு காட்டன் துணியில் துடைத்து விளக்கிற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்கவும்.

பின்னர் இந்த விளக்கை வீட்டு பூஜை அறையில் மகா லட்சுமி தயார் படத்திற்கு முன் வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றவும்.

பிறகு அதில் தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி செல்வம் சேர வேண்டும் என்று மகா லட்சுமி தாயாரிடம் மனதார வேண்டிக் கொள்ளவும்.

இந்த விளக்கை எந்த கிழமை வேண்டுமாலும் ஏற்றி வழிபடலாம்.ஒவ்வொரு முறை விளக்கு ஏற்றும் போதும் புது அகல் விளக்கை தான் பயன்படுத்த வேண்டும்.வாரம் ஒருமுறை தவறாமல் விளக்கேற்றி வழிபட வேண்டும்.