எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

Photo of author

By Divya

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

உங்களில் பலருக்கு சொந்த வீடு கட்டணும் / வாங்கணும், நகை சேமிக்கவும், நிலம் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பல ஆசைகள், எண்ணங்களை வைத்திருப்பீர்கள். இதுபோன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்யவும்.

அம்மன்… நம் எண்ணங்களை நிறைவேற்றும் தெய்வம்… நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த கடவுள் ஆவார்.

தங்கள் வீட்டருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று மல்லிகை பூவை அம்மனுக்கு சாற்றிவிட்டு தங்கள் மனதில் உள்ள நீண்ட நாள் ஆசைகளை தெரிவித்து மனதார வேண்டிக் கொள்ளவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கோரிகையை அம்மன் தெய்வம் ஏற்றுக் கொள்வார். விரைவில் உங்கள் ஆசைகள் நிறைவேறும்.

அவ்வாறு நிறைவேறினால் அம்மன் கோயிலுக்கு கூழ் காய்ச்சி கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று வேண்டுதல் வைக்கவும்.

தங்கள் ஆசை நிறைவேறியதும் அம்மன் கோயிலுக்கு கொண்டு சென்று கூழ் கொடுக்கவும்.