முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!!

0
106
#image_title

முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!!

இன்றைய காலத்தில் ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக முகப்பரு இருக்கின்றது.இந்த முகப்பரு நம் இளம் பருவத்தில் தோன்ற ஆரமிக்கிறது.இந்த முகப்பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி நம்முடைய அழகை கெடுத்து முகத்தை பொலிவற்றதாக மாற்றி விடுகிறது.

மேலும் இந்த முகப்பரு கொழுப்பு நிறைந்த உணவு,மன அழுத்தம் மற்றும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் தன்மையால் ஏற்படுகிறது.இதற்கு தொடர்ந்து தண்ணீர் குடித்து வருதல்,அதிக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்த்தல்,குளிர்ச்சி நிறைந்த உணவுகளை எடுத்து வருதல் உள்ளிட்டவற்றை கடை பிடிப்பதன் மூலம் பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*முல்தானி மிட்டி – 2 தேக்கரண்டி

*எலுமிச்சை பழச்சாறு – 3 முதல் 4 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் முல்தானி மிட்டி 2 தேக்கரண்டி சேர்க்கவும்.பின்னர் அதில் எலுமிச்சை பழச்சாறு 3 முதல் 4 தேக்கரண்டி அளவு சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலக்கவும்.

பின்னர் முகத்தை சுத்தமான தண்ணீரை கொண்டு நன்கு கழுவவும்.பின்னர் கலக்கி வைத்துள்ள பேஸ்டை முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் அப்ளை பண்ணவும்.பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிக் கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் முகத்தில் தென்பட்ட முகப்பருக்கள்,கரும்புள்ளிகள் உள்ளிட்டவை விரைவில் மறைந்து விடும்.எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்துக்கு பளபளப்பை அள்ளித்தருகிறது.அதேபோல் முல்தானி மிட்டி முக அழகை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.அதுமட்டும் இல்லாமால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது மிகவும் அவசியமான ஒன்று.

மற்றொரு ரெமிடி:-

தேவையான பொருட்கள்:-

*கிராம்பு – 5 முதல் 6

*பன்னீர் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு உரலில் கிராம்பு(இலவங்கம்) 5 முதல் 6 வரை போட்டு இடித்து கொள்ளவும்.பின்னர் அதில் 1 தேக்கரண்டி பன்னீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.அதை பருக்கள் இருக்கும் இடத்தில் வைக்கவும்.தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தோம் என்றால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கி விடும்.

Previous articleதீராத அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!
Next articleகல் உப்பு + புளி போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!