மாற்றுத்திறனாளிகள் தொடர் உதவித்தொகை பெற இதனை செய்யுங்கள்! தேனி ஆட்சியரின் வேண்டுகோள்!
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாதாந்திர பராமரிப்பு
உதவித்தொகை பெற்று பயனடைந்து வரும் பயனாளிகள் வாழ்நாள் சான்று பெற்று
ஒப்படைத்திட தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் .க.வீ.முரளீதரன்., இ.ஆ.ப., அவர்கள்
வேண்டுகோள்.
தேனி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 75% மற்றும்
அதற்குமேல் கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி
குன்றியவர்கள் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொழுநோயால்
பாதிக்கப்பட்டவர்கள மற்றும் முதுகு தண்டுவடம்/பார்கின்சன்/தண்டுவட மரபு நோயினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2000/- வீதம் இவ்வலுவலகத்தின் மூலம் மாதாந்திர
பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் “வாழ்நாள் சான்று கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று இவ்வலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து மாதாந்திர உதவித்தொகை பெற்று பயனடையலாம். எனவே இதுநாள்வரை வாழ்நாள் சான்று ஒப்படைக்காத பயனாளிகள் இச்சான்றிக்கான படிவம் www.theni.nic.in என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்று கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும்
புகைப்படம் ஒன்று ஆகிய இணைப்புகளுடன் பாதுகாவலர் மூலமாகவோ அல்லது தபால்
மூலமாகவோ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு 30.09.2022க்குள்
ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயனடையுமாறு, தேனி மாவட்ட
ஆட்சித்தலைவர் .க.வீ.முரளீதரன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.