ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் கோலி செய்யப்போகும் மாற்றம்!

0
89

ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் கோலி செய்யப்போகும் மாற்றம்!

ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கிறது.

நாளையே ஆசியக்கோப்பை தொடர் தொடங்கினாலும், நாளை மறுநாள் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காகதான் உலகக் கிரிக்கெட் உலகம் காத்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன.

கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குப் பதிலடி கொடுக்க இந்திய அணி  காத்திருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் மீண்டும் திரும்புமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கோலி முக்கியமான ஒரு மாற்றத்தை மேற்கொள்ள உள்ளார்.

இதுவரை ஜீனியஸ் எம் ஆர் எஃப் பேட்டை பயன்படுத்திய கோலி, இதன் பின்னர் எம் ஆர் எஃப் விசார்ட் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய பேட்டைப் பயன்படுத்த உள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.