நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

Photo of author

By Divya

நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

நவீன உலகில் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு எகிறியப்படி இருக்கின்றது. இதனால் வீட்டு செலவுகளை சமாளித்து பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

சிறுக சிறுக சேமித்தாலும் அவை சில எதிர்பாராத விஷயங்களுக்காக செலவாகி விடுகின்றது. இதனால் பணம் பற்றமால் கடன் வாங்க ஆரம்பித்து விடுகின்றோம். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மேலும் கடன் என்று வாழ்க்கை முழுவதும் கடனாளியாகவே உருவெடுத்து விடுகிறோம்.

எனவே நாம் சம்பாதிக்கும் பணம் தேவையில்லாத விஷயங்களுக்காக கரைந்து போகாமல் அவை சேமிப்பாக மாற கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும்.

பரிகாரம் செய்யும் முறை…

ஒரு வெற்றிலை எடுத்து அதில் சிறிதளவு குங்குமப் பூ மற்றும் பச்சை கற்பூரத்தை வைத்து நன்கு மடித்திக் கொள்ளவும். இதை வீட்டில் உள்ள பணப் வைத்திருக்க இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பணத்தை ஈர்க்கும் தன்மை தானாக வந்து விடும். இதனால் அதிகளவு பணத்தை சேமிக்க முடியும். வெற்றிலையை 10 நாட்களுக்கு ஒரு முறை அவசியம் மாற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.