கார தோசை சுவையாக இருக்க இப்படி செய்யுங்க! அடடா என்ன ஒரு ருசி!!

0
34
#image_title

கார தோசை சுவையாக இருக்க இப்படி செய்யுங்க! அடடா என்ன ஒரு ருசி!!

நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.இந்த தோசை ரெசிபியை கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை வைத்து செய்தோம் என்றால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

*தோசை மாவு – 1 கப்

*வரமிளகாய் – 8

*கல் உப்பு – தேவையான அளவு

*தக்காளி – 1

*சின்ன வெங்காயம் – 4

*பூண்டு – 4 பற்கள்

*நெய் – தேவையான அளவு

செய்முறை:-

1.ஒரு பவுலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் வரமிளகாயை ஊற வைத்து கொள்ளவும்.

2.பிறகு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள வர மிளகாய்,தக்காளி,பூண்டு,சின்ன வெங்காயம்,தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

3.அடுப்பில் தோசைக்கல் வைத்து அவை சூடேறியதும் பெரிய வெங்காயம் ஓன்றை பாதியாக நறுக்கி அதில் தேய்க்கவும்.பிறகு மாவை ஊற்ற வேண்டும்.

4.தோசை மேல் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி வேண்டும்.அதன் பிறகு தோசை மேல் அரைத்து வைத்துள்ள கலவை 2 தேக்கரண்டி கொட்டி சுற்றிலும் பூச வேண்டும்.

5இந்த தோசைக்கு எந்த ஒரு சைடிஷ் தேவைப்படாது.மேலே கொடுக்கப்பட்டுள்ள முறை படி செய்தால் குடும்பத்தில் அனைவரும் இந்த தோசையை விரும்பி உண்பார்கள்.