வீட்டில் மொய்க்கும் ஈக்களை காலி செய்ய அருமையான 5 வழிகள்!! 100% இயற்கை முறை!

0
32
#image_title

வீட்டில் மொய்க்கும் ஈக்களை காலி செய்ய அருமையான 5 வழிகள்!! 100% இயற்கை முறை!

நம் அனைவரின் வீடுகளிலும் இருக்கும் பெரிய பிரச்சனை ஈக்கள் கூட்டம் தான்.இவைகள் மலம்,அழுகிய பொருட்கள்,சாக்கடை,குப்பைகள் என்று அனைத்து இடங்களிலும் மொய்த்து வீட்டில் உணவு பொருட்கள் மீது உட்கார்வதால் நமக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.நம் வீட்டில் குபைகளை தேக்கி வைக்காமல் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.சமையலறையை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம்.

இருந்தும் நம் வீட்டில் ஈக்கள் கூட்டம் சுற்றி திரிந்தால் அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளில் ஏதேனும் ஒன்றை பாலோ செய்து பாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.

1) மிளகாய் தூள் 3 தேக்கரண்டி எடுத்து ஒரு கப் தண்ணீரில் மிக்ஸ் செய்து கொள்ளவும்.அதை ஒரு பாட்டிலில் நிரப்பி சூரிய ஓளி அதிகம் படும் இடத்தில் ஒரு வாரம் வைக்கவும்.பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.அடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி மூடிக் கொள்ளவும்.
பின்னர் வீட்டில் ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே பண்ணவும்.இப்படி செய்தால் ஈக்கள் உடனே மயக்க நிலைக்கு சென்று இறந்து விடும்.

2) வீட்டில் இருக்கும் கல் உப்பை பயன்படுத்தி ஈக்களை உடனே விரட்ட முடியும்.இது மிகவும் சுலபமான முறை.முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் மற்றும் 3 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.அவை கொதித்து வந்த பின்னர் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ள வேண்டும்.பிறகு வீட்டில் ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே பண்ணவும்.இப்படி செய்தால் ஈக்கள் வீட்டை விட்டு தெறித்தோடி விடும்.

3) அதிக மருத்துவ குணம் நிறைந்த இலவங்கத்தை வைத்து வீட்டில் உள்ள ஈக்களை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான்.நாம் விரும்பி உண்ணும் ஆப்பிள் பழத்தை பாதியாக அறுத்து கொள்ள வேண்டும்.அதில் ஒரு பாதி மட்டும் எடுத்து அதில் 5 முதல் 6 இலவங்கத்தை சொருகி வீட்டில் ஈக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.இப்படி செய்தால் ஈக்கள் சில நிமிடத்தில் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

4) அதேபோல் நாம் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப்பை கொண்டும் ஈக்களை விரட்டலாம்.அதற்கு முதலில் ஒரு பவுல் எடுத்து 3 முதல் 4 தேக்கரண்டி வினிகர் சேர்த்து கொள்ளவும்.பிறகு அதில் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப்பு தண்ணீர் 1 தேக்கரண்டி அளவு விட்டு நான்கு கலக்கி அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி மூடிக் கொள்ளவும்.
பின்னர் வீட்டில் ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே பண்ணவும்.இப்படி செய்தால் ஈக்கள் ஆளை விடுடா சாமி என்று நிமிடத்தில் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

5) அற்புத மருத்துவ மூலிகையான துளசியை வைத்து வீட்டில் மொய்த்து கிடைக்கும் ஈக்களை விரட்டி விடலாம்.முதலில் 1 கைப்பிடி அளவு துளசி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு மீண்டும் பாதி கைப்பிடி அளவு துளசி எடுத்து அதை நசுக்கி சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.இதற்கு முன் கொதிக்க வைத்துள்ள துளசி இலை சாற்றை ஆறவைத்த கொள்ளவும்.பிறகு நசுக்கி வைத்துள்ள துளசியை அதில் போட்டு கலக்கி கொள்ளவும்.இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி மூடிக் கொள்ளவும்.பின்னர் வீட்டில் ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே பண்ணவும்.இவ்வாறு செய்வதன் மூலம் ஈக்கள் வீட்டில் இருந்து வெளியேறி விடும்.