எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

0
218

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

நாம் எண்ணெயில் பொரித்த உணவுகளை சற்று அதிகமாக சாப்பிடும் பொழுது சில சமயங்களில் நமக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டிருக்கும் இது நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

வழக்கமாக நாம்  உண்ணும் போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்றினை விழுங்குவது அதிகமாக இருக்கும்.

வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிட்ட பிறகு செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது.  அதில் உள்ள மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகின்றன. 

இதோ அதற்கான எளிய வைத்திய முறைகள்,

1. மோருடன் பெருங்காயம், சீரகம் கலந்து குடிக்கலாம்.

2. இரவு சீரகத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை காலை மற்றும் மாலை ஒரு டம்ளர் குடித்து வரலாம்.

3. சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம்  இருக்கிறத. இதனை ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும். 

4. மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை  நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

5. வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அனைத்து வயிற்று பிரச்சனைகளுக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கும் சிறந்தது.

காலை, மதியம், மற்றும் இரவு, வேலைகளில் உணவு உண்டவுடன்  சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சாப்பிட்டவுடன் உடனே அமரக்கூடாது.  ஒரு குறுநடை நடந்து விட்டு பின் அமர வேண்டும்.

Previous articleஉடல் எடை செரிமான பிரச்சனை நீங்க வேண்டுமா? இதய நோயாளிகள் கர்ப்பிணிகள் என அனைவருக்கும் ஏற்ற ஆல்இன்ஆல் பானம்!
Next articleசர்க்கரை நோயினால் குதிகால் வலியா? இதோ அதற்கான எளிய தீர்வு!