வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!

0
100

வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கின்ற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பல் துலக்காமல் கூட கண் விழித்த உடனேயே அந்த டீயை தான் கையில் எடுப்பார்கள். டீயை குடித்துவிட்டு பிறகு பல் துலக்கி தயாராகுவார்கள்.

ஒருவேளை டீ குடிக்க தவறினால் அவர்களுக்கு அன்றைய நாளில் ஏதோ ஒரு குறை இருப்பது போல தோன்றும். அந்த அளவிற்கு இப்பொழுது அனைவரும் தீர்க்கு அடிமையாகி இருக்கிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிட்ட பிறகு திரும்ப மாலை நேரத்தில் இரவு என்று பலமுறை இந்த டீயை குடித்து வருகிறார்கள்.

அந்த டீயை குடித்து விட்டால் அவர்கள் உடல் சோர்வெல்லாம் நீங்கி மிகுந்த ஆற்றலோடு இருப்பதாக உணர்கிறார்கள். ஆனால் இவ்வாறு வெறும் வயிற்றில் அடிக்கடி டீயை குடிப்பதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று சிலருக்கு தெரிவதில்லை. எனவே இவ்வாறு டீ குடிப்பதனால் நம் உடலுக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதையும், டீ குடித்து பழகியவர்களுக்கு அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு ஒரு ஈஸியான டிப்ஸ் இங்கு தெரிந்து கொள்வோம்.

முதலில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் ஏற்படும் தீமைகளை பார்ப்போம்.

வெறும் வயிற்றில் டீ குடிப்பவர்கள் நமது இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே இவ்வாறு வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பல மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

1. வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் சில பேருக்கு ஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. சில பேருக்கு பசியை எடுக்காமல் டீ குடித்தால் மட்டும் போதும் என்று உணர்வார்கள். எனவே வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் சில பேருக்கு ஜீரணம் ஆகாமல் சில பேருக்கு பசியை எடுக்காமல் விபரீதமான கோளாறுகளை உடலில் ஏற்படுத்துகிறது.

2. மேலும் இந்த டீயினால் ஒரு சிலருக்கு விபரீதமான பசி எடுக்கும் இதனால் அவர்களின் உடல் எடை மிகவும் அதிகமாகும். இதனால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

3. வெறும் வயிற்றில் இந்த டீயை குடிப்பதனால் மேற்கண்ட பிரச்சினைகள் மட்டுமல்லாமல் கேஸ் அசிடிட்டி நெஞ்செரிச்சல் என்று இந்த பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டு சாப்பிட முடியாமல் போகிறது.

4. அதேபோல் வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு ஜீரணமும் சரியாக நடக்காமல் நம் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்காமல் போகிறது.

தினமும் டீ குடித்து பழகிவிட்டோம் நிறுத்த முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரு ஈஸியான டிப்ஸை இங்கு பார்ப்போம்.

அதாவது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக முதலில் வெதுவெதுப்பான சுடுநீரை குடித்துவிட்டு அதன் பிறகு டீ காபியை குடித்து வரலாம். அதாவது முதலில் சுடுதண்ணீரை குடித்துவிட்டு அதன் பிறகு டீ காபி குடிப்பதனால் அந்த அளவிற்கு எதுவும் விளைவுகள் ஏற்படாது என்று பல நிபுணர்கள் கூறியுள்ளனர். இல்லையென்றால் காலை உணவு எடுத்துக் கொண்ட பிறகு இந்த டீயை குடித்து வரலாம் என்றும் கூறுகின்றனர்.

எனவே நம் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய டீயை வெறும் வயிற்றில் குடிப்பதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் உடல் மிகவும் ஆற்றலோடு ஆரோக்கியமாக காணப்படும்.

Previous articleஇதை ஒரு முறை தேய்த்தாலே போதும்!!உங்கள் பேன் ஈறு அனைத்தும் நிரந்தரமாக நீங்கிவிடும்!!
Next articleமருக்கள் உடனடியாக உதிர்ந்து விட இந்த பொருட்கள் போதும்!!