ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஜனநாயக கடமையை ஆற்ற வெளியூர்களில் வேலை பார்க்கும் வாக்காளர்கள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.
சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று இரவே லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய தொடங்கி விட்டார்கள். இந்நிலையில், வாக்களிப்பதற்காக வெளியூருக்கு செல்லும் வாக்காளர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பேருந்துகளில் இவசமாக கட்டணம் ஏதும் இன்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஊட்டி ஆகிய மண்டலங்களில் இலவச பேருந்து பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளனர்.
இந்த சலுகையை பெற வாக்காளர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பேருந்தில் பயணிக்கும்போது அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை மறக்காமல் கொண்டு செல்ல வேண்டும். அப்படி வாக்காளர் அடையாள அட்டையை காட்டினால் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.