உங்களுக்கு வறட்டு இருமல் இருக்கா!!? அப்போது தேனுடன் இந்த பொருளை இப்படி சாப்பிடுங்க!!!

0
38
#image_title
உங்களுக்கு வறட்டு இருமல் இருக்கா!!? அப்போது தேனுடன் இந்த பொருளை இப்படி சாப்பிடுங்க!!!
நம்மில் சிலருக்கு வறட்டு இருமல் தொந்தரவு இருக்கும். இந்த வறட்டு இருமலை குணப்படுத்த என்ன. செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பருவகால மாற்றங்கள் நம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதில் வறட்டு இருமல் இரவு நேரங்களில் அதிக தொந்தரவுகளை கொடுக்கும். இந்த வறட்டு இருமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும்.
இந்த வறட்டு இருமல் பிரச்சனையை சரி செய்வதற்கு இரண்டே இரண்டு பொருட்கள் போதுமானது. அது என்னென்ன பொருள் அதை எவ்வாறு பயன்படுத்தி வறட்டு இருமல் குணப்படுத்தவது என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
வறட்டு இருமல் குணப்படுத்த தேவையான பொருட்கள்…
* தேன்
* கிராம்பு
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாய் வைத்து இதில் தேவையான அளவு கிராம்பு சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த பிறகு அடுப்பை அனைத்துவிட்டு கடாயை இறக்கி விடவேண்டும்.
கிராம்பு ஆறிய பிறகு இதில் தேன் கலந்து கொள்ள வேண்டும். நன்கு கலந்து விட்டு இதை அப்படியே மென்று சாப்பிட வேண்டும். இதனால் வறட்டு இருமல் குணமடையும்.
மேலும் வறுத்த கிராம்புடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் தேற்று நோய்களை தடுக்க உதவி செய்கின்றது. தேனுடன் வறுத்த கிராம்பு சேர்த்து சாப்பிடும் பொழுது சளி. இருமல் போன்ற பிரச்சனையும் குணமடைகின்றது.