உங்கள் உடலில் தேமல் அதிகளவு பரவி இருக்கிறதா? இதை மறைய வைக்க எளிய வைத்தியம் இதோ!!

Photo of author

By Divya

உங்கள் உடலில் தேமல் அதிகளவு பரவி இருக்கிறதா? இதை மறைய வைக்க எளிய வைத்தியம் இதோ!!

வைட்டமின் பி12 குறைபாடு,உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் தேமல் பாதிப்பு ஏற்படுகிறது.உடலில் மார்பு,முதுகு,முகத்தில் தான் அதிகளவு தேமல் படர்கிறது.

ஒருமுறை தேமல் வந்து விட்டால் அதை குணப்படுத்திக் கொள்ளவது நல்லது.ஆரம்ப நிலையில் இதை கவனிக்க தவறினால் பின்னாளில் உடல் முழுவதும் தேமல் பரவத் தொடங்கிவிடும்.

தேமல் ஒரு தொற்று பாதிப்பு என்பதினால் தேமல் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்,டவலை பிறர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இந்த தேமலை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தீர்வு 01:-

தேவையான பொருட்கள்:-

1)புளியங்கொட்டை
2)ஆலிவ் ஆயில்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு புளியங்கொட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பொடியாக்கி கொள்ளவும்.இதில் ஒரு தேக்கரண்டி புளியங்கொட்டை பொடியில் 1 1/2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.இதை தேமல் மீது பூசினால் அவை விரைவில் மறையும்.

தீர்வு 02:-

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)துளசி
3)தேன்

செய்முறை:-

சிறிது வேப்பிலை மற்றும் துளசி எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டில் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேமல் மறையும்.

தீர்வு 03:-

தேவையான பொருட்கள்:-

1)ஆடாதோடை
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு ஆடாதோடை இலையை அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து தேமல் மீது தடவி வந்தால் அவை சில வாரங்களில் மறைந்து விடும்.