கோடை காலத்திலும் மூக்கில் சளி வடிகிறதா? இது தாங்க காரணம்!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

கோடை காலத்திலும் மூக்கில் சளி வடிகிறதா? இது தாங்க காரணம்!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

சளி பாதிப்பு மழை மற்றும் குளிர்காலத்தில் தான் ஏற்படும் என்று இல்லை வெயில் காலத்திலும் உருவாகும்.இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம்.அதுமட்டுமின்றி வைரஸ்களாலும் சளி பாதிப்பு ஏற்படும்.

அலர்ஜி பிரச்சனை இருந்தாலும் சளி பாதிப்பு ஏற்படும்.உடல் சோர்வு,இருமல்,கண்களில் நீர் வடிதல்.தலைவலி,தும்மல் ஆகியவை சளி பாதிப்பிற்கான அறிகுறிகள் ஆகும்.சளி பாதிப்பு இருந்தால் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்க வேண்டும்.அதுமட்டும் இன்றி சில மூலிகைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

கோடை காலத்தில் ஏற்படும் சளியை கரைத்து குணமாக்கும் பாட்டி மருந்து:

தேவைப்படும் பொருட்கள்:-

1)அதிமதுரம்
2)துளசி
3)சித்தரத்தை
4)மிளகு
5)கிராம்பு
6)திப்பிலி

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சம அளவு எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி அதில் போடவும்.ஒரு கப் நீர் கொதித்து அரை கப் அளவிற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு இதை ஒரு தட்டு போட்டு 5 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.பின்னர் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.