வீட்டில் ஒரே கடி எறும்பு தொல்லையா இருக்கா? இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
108
#image_title

வீட்டில் ஒரே கடி எறும்பு தொல்லையா இருக்கா? இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பலர் வீடுகளில் இந்த எறும்பு தொல்லைகள் அதிகம் இருக்கும். இவை உண்ணும் உணவு, இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது. எறும்புகளின் சிவப்பு எறும்பு, சாமி எறும்பு என்று சொல்லப்படும் கருப்பு எறும்பு, கட்டெறும்பு என பல வகைகள் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட அடுத்த நொடியில் எறும்பு கூட்டம் அதை உண்ண வரிசை கட்டிக்கொண்டு வரும். இதனால் நமக்கு பெரும் தொல்லை, தேவையில்லாத டென்சன் தான் ஏற்படும். இந்த எறும்பு தொல்லையை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தீர்வு காண்பது நல்லது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*வினிகர் – 2 தேக்கரண்டி

*தண்ணீர் – 1/4 டம்ளர்

*ஸ்ப்ரேயர் – 1

செய்முறை:-

ஒரு பவுலில் 2 தேக்கரண்டி வினிகர் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எறும்பு கூட்டம் காணப்படும் இடங்களில் ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் அனைத்தும் செத்து மடிந்து விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*புதினா – சிறிதளவு

*தண்ணீர் – 1/2 டம்ளர்

*ஸ்ப்ரேயர் – 1

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு புதினா இலைகள் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸி செய்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எறும்பு கூட்டம் காணப்படும் இடங்களில் ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் அனைத்தும் செத்து மடிந்து விடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

*தண்ணீர் – 1/4 தேக்கரண்டி

*ஸ்ப்ரேயர் – 1

செய்முறை:-

ஒரு பவுலில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எறும்பு கூட்டம் காணப்படும் இடங்களில் ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் அனைத்தும் செத்து மடிந்து விடும்.

தீர்வு 4:

தேவையான பொருட்கள்:-

*இலவங்கம் – 4

*கற்பூரம் – 2

*எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி

*ஷாம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

மிக்ஸி ஜாரில் இலவங்கம் மற்றும் கற்பூரத்தை சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பவுலில் 3 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து பொடி செய்து வைத்துள்ள இலவங்கம் மற்றும் கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு 1 தேக்கரண்டி ஷாம்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதை எறும்பு கூட்டம் காணப்படும் இடங்களில் ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் அனைத்தும் செத்து மடிந்து விடும்.

Previous articleஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா! தினமும் பாதங்களை மாசஜ் செய்யுங்க !!
Next articleபேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தினால் உங்கள் கழுத்து பகுதியில் படிந்த கருமை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!