தீராத பல் வலி இருக்கின்றதா!!? அதை குணப்படுத்த எளிமையான டிப்ஸ் இதோ!!! 

0
95
#image_title

தீராத பல் வலி இருக்கின்றதா!!? அதை குணப்படுத்த எளிமையான டிப்ஸ் இதோ!!!

தீராத பல் வலியை குணப்படுத்த உதவும் சில இயற்கையான அதே சமயம் எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.

நம்மில் சிலருக்கு பல் வலி என்பது தீராத பிரச்சனை இருக்கும். பல் வலி என்பது எதனால் ஏற்படுகிறது என்றால் வாயில் உள்ள கிருமிகள் பற்களை அரித்து நல்ல பற்களை சொத்தைப் பற்களாக மாற்றி நமக்கு பல் வலியை ஏற்படுத்தி கொடுக்கின்றது.

பல் வலி வந்தால் உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்படும். இந்த பல் வலியை குணப்படுத்த பெரும்பாலும் எல்லாரும் மாத்திரைகளைத் தான் எடுத்துக் கொள்கிறார்கள். மாத்திரைகள் தற்சமயத்திற்கு தீர்வு கொடுக்கும். மாத்திரை இல்லாமல் பல் வலியை குணப்படுத்த இந்த பதிவில் சில எளிமையான டிப்ஸ் தெரிந்து கொள்ளலாம்.

பல் வலியை குணப்படுத்த சில எளிமையான டிப்ஸ்…

* காலையில் மிளகுத்தூள் மற்றும் உப்பு இரண்டையும் வைத்து பல் தேய்த்தால் பல் வலி மற்றும் ஈறுகளில் ஏற்படுகின்ற வலி குணமடையும்.

* பல் வலியை குணப்படுத்த பப்பாளி பால் பயன்படுத்தலாம். மேலும் பப்பாளி பால் ஈறுகளில் ஏற்படுகின்ற வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.

* பல் வலி இருப்பவர்கள் பல் துலக்கிய பிறகு ஒரு பெரிய நெல்லிக்காயை நன்கு மென்று சாப்பிட்டால் பல் வலி குணமடையும்.

* பிரம்மத் தண்டு இலையின் சாம்பலை கொண்டு பல் தேய்த்தால் சொத்தை பல், பல் கறை சரியாகும்.

* தினமும் ஆயில் புல்லங்க் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்தும் வைரஸ் தொற்றுகளில் இருந்தும் பற்களை பாதுகாக்கலாம்.

* சொத்தைப் பல் ஏற்படுத்துகின்ற வலியை குறைப்பதற்கு ஒரு பல் பூண்டை நசுக்கி செத்தை பல் மீது வைக்கலாம். அதே போல கிராம்பையும் பயன்படுத்தலாம்.

* பற்கள் வலி குறைவதற்கு கருவேலம் பட்டை பொடியால் பல் துலக்கலாம். இதனால் பற்கள் உறுதியாகும்.

* ஈறுகளில் வலி ஏதேனும் இருந்தால் வெங்காயச் சாறு எடுத்து பஞ்சில் நினைத்து அதை உறைகள் மீது தேய்த்து விடலாம்.

* மாசிக்காய் தூளை சிறிதளவு எடுத்து நீரில் போட்டு குதிக்க வைத்து அந்த தண்ணீரை பயன்படுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும் இதனால் பல் வலி குறையும். ஈறுகள் பலம் பெறும்.

* கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பல் வலி ஏற்படுவது குறையும். பற்கள் பலம் பெறும்.

Previous articleகுப்பைமேனியின் மருத்துவ பயன்கள்!!!
Next articleவைட்டமின்கள் டி, ஈ, கே கிடைக்கும் உணவுகள்!!! இதன் நன்மைகள் என்னென்ன!!?