உங்களுக்கு முகப்பரு இருக்கா? இந்த 2 பொருளை முகத்திற்கு பயன்படுத்தி பாருங்கள்!! நடக்கும் அற்புதத்தை பார்த்து ஷாக் ஆகிடுவீங்க!!
நம்மில் பெரும்பாலானோர் முகப்பரு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த முகப்பருக்கள் வர தொடங்கி விட்டாலே முகத்தின் அழகு குறைந்து விடுமென்ற அச்சம் அனைவரிடமும் இருக்கும் பொதுவான ஒன்று தான். இந்த பாதிப்பிற்காக ரசாயனம் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதால் நாம் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த முகப்பரு பாதிப்புகள் நீங்க இயற்கை வழிகளை கடைபிடிப்பதே சிறந்தது.
1)முகப்பரு வரக் காரணம்:-
*அதிக எண்ணெய், நெய், வெண்ணெய் உணவு உண்ணுதல்
*கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட் உள்ளிட்டவைகளை உண்ணுதல்
*அதிகளவு கோழி இறைச்சி உண்ணுதல்
*துரித உணவு உண்ணுதல்
*இரசாயனம் கலந்த க்ரீமை முகத்திற்கு பயன்படுத்துதல்
2)முகப்பரு நீங்க சில வழிகள்:-
*கீரைகள், பழங்கள், நட்ஸ் உள்ளிட்டவைகளை சாப்பிடுவதன் மூலம் தீர்வு கிடைக்கும்
*அடிக்கடி முகத்தை கழுவுதல்
*ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் நடப்பது
3)முகப்பரு நீங்க இயற்கை வழி:
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
*பன்னீர் – 2 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் 1 எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும். அதில் பாதி எலுமிச்சையின் சாற்றை ஒரு பவுலுக்கு பிழிந்து கொள்ளவும். அடுத்து முகத்திற்கு பயன்படுத்தும் பன்னீர் அதாவது ரோஸ் வாட்டர் 2 தேக்கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாறு உள்ள பவுலில் கலந்து விடவும்.
இந்த கலவையை நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்து முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். பின்னர் ஒரு காட்டன் துணியால் முகத்தை துடைத்துக் கொள்ளவும். பிறகு தயார் செய்து வைத்துள்ள எலுமிச்சை சாறு + பன்னீர் கலவையை முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். இந்த கலவை 15 முதல் 20 நிமிடம் வரை முகத்தில் இருக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் முகத்தில் உள்ள பருக்கள், அதனால் ஏற்படும் கரும் புள்ளிகள் முழுமையாக நீங்கி விடும்.