உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..

0
200

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..

நம் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் இருக்கும்ஒட்டு குடல் என்பது நம் உடலின் அடிவயிற்றின் வலப்புறத்தில் உள்ளது. இந்த ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற அமைப்பில் காணப்படும். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்லும். ஒட்டுக்குடலானது உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.ஒட்டுக்குடலின் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ளலாம். ஒட்டுகுடலின் வாய் மூடப்படும் நேரத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு ஒட்டுக்குடலின் திசுக்கள் இறக்க நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு உமிழ்நீர் போன்ற திரவமும் கிருமிகளும் சுரக்கப்பட்டு ஒட்டுக்குடல்களை நீங்க செய்கின்றது. இதனால் அதிக வலி ஏற்படும். இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால். பல இன்னல்களை சந்திக்க நேரிடும். இதனால்மருத்துவரை உடனடியாக அணுகவும். அவர்கள் பாதித்த நபர்களை பரிசோதித்து அவர்கள் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் மிகவும் நல்லது.மேலும் இந்த ஒட்டுக்குடலை கண்டறிய உதவும் மருத்துவ ஆய்வுகள் கீழே பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.ரத்த பரிசோதனை – ரெத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.ஸ்கேன் – மீயொலி சோதிப்பான் கணினி கதிரியக்க சோதிப்பான். ஆகிய கருவி மூலம் ஒட்டுக்குடல் இருப்பதை அறிய பயன்படுகிறது.

 

 

 

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்!
Next articleKanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன?