உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கின்றதா? இந்தப் பிரச்சனையின் அறிகுறி தான் எச்சரிக்கை!

0
191

உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கின்றதா? இந்தப் பிரச்சனையின் அறிகுறி தான் எச்சரிக்கை!

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணங்கள் மற்றும் அதனை சரி செய்யும் வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம்.

வாயில் ஏற்படும் துர்நாற்றம் என்பது நம் உணவு எடுத்துக் கொண்டதன் பின் வாயினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இரவு உறங்குவதற்கு முன் வாயினை சுத்தம் செய்து பிறகு உறங்க வேண்டும் இவ்வாறு செய்தால் வாய் துர்நாற்றம் ஓரளவு குறையும் மற்றும் வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்பானது அல்ல வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் அல்சர், சளி கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் இவற்றின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

நாம் இரவில் சாப்பிடும் உணவில் அதிகப்படியான மசாலா, எண்ணெய், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை காணலாம்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம். இதனுடன் சில புதினா இலையை மென்று சாப்பிடலாம்.

காலையில் எழுந்தவுடன் காப்பியை தவிர்த்து விட்டு நாலு டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுத்துவதோடு அல்சர் நீங்க வாய் துர்நாற்றம் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

கிராம்பு சிறிதளவு எடுத்து அதனை நன்றாக பொடி செய்து வைக்க வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் கிராம்பு பொடி சிறிதளவு சேர்த்து சாப்பிட வேண்டும். இதன் மூலமாகவும் வாய் துர்நாற்றம் அடைவதை குறைக்கலாம்.

 

Previous articleரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்!
Next articleஆஸ்துமா மூச்சுத்திணறல் கட்டுப்படுத்த இத்தனை வழிகளா??